Thursday, December 23, 2010

ஒரே இணையத்தளத்தை பார்வையிடும் மற்றொருவரிடம் அரட்டை அடிக்க Talkita


குறிப்பிட்ட இணையத்தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரம் உங்களைப்போல் அந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடும் அதே

விடயத்தை வாசித்துக்கொண்டிருக்கும் மற்றொருவரிடம் அரட்டை அடிக்க முடிந்தால் ...

உதாரணமாக நெட்டில் ஒரு செய்தியை பார்க்கிறீர்கள் அந்த நேரம் மற்றொருவரும் அதைப்பார்வையிடுகிறார் அவரிடம் அதைப்பற்றிய கருத்துக்களை கேட்கலாம். அல்லது ஆன்லைனிலில் ஒரு பொருளை வாங்க நினைக்கிறீர்கள். அந்த நேரத்தில் அங்குவரும் மற்றொருவரிடம் சேர்ந்து அப்பொருளை வாங்க முடியுமல்லவா?.

இந்த வசதியைப்பெற உங்களிடம் கூகுளின் Chrome உலாவியும் அதனுடன் நிறுவ Talkita என்ற extension  இருந்தால் போதும் நெட்டில் ஒரே ஆர்வத்தை கொண்ட மற்றொருவரிடம் அரட்டை அடிக்கலாம்.


இந்த extension ஐ நிறுவியதும் browser bar இல் தெரியும் சாட் ஐகான் மீது கிளிக் செய்து செட்டிங்குகளை மாற்றங்கள் செய்துகொள்ளலாம். சாட் செய்வதற்கு பேஸ்புக் யூசர் ஐடியை பயன்படுத்தி லாகின் செய்துவிடுங்கள்.


குறிப்பு இந்த extension இன்னமும் பரிசோதனை நிலையில் இருப்பதால் பிரைவைசி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமைபெறவில்லை. அத்துடன் HTTPS என்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தளங்களில் இயங்காது.

டவுண்லோட் செய்ய

No comments:

Post a Comment